Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிணற்றில் கிடந்த தொழிலாளி சடலம்…. உறவினர்களின் போராட்டம்…. 2 நாட்களுக்கு பிறகு உடல் ஒப்படைப்பு….!!

கிணற்றில் பிணமாக மிதந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அலங்காரப்பேரி பகுதியில் முத்துராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2-ஆம் தேதி முத்துராமலிங்கம் திடீரென மாயமானார். இந்நிலையில் அங்குள்ள தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் முத்துராமலிங்கம் பிணமாக மிதந்தார். இதுகுறித்து சீவலப்பேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து கவல்துரையினர் முத்துராமலிங்கத்தின் உடளை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே உறவினர்கள் முத்துராமலிங்கம் கொலை செய்ததாகக் கூறி அவரது உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 2-வது நாளாக நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கங்கைகொண்டான் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்போவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் முத்துராமலிங்கத்தின் உடலை பெற்றுச் சென்றனர்.

Categories

Tech |