Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்…. அதிர்ச்சியடைந்த குடுபத்தினர்…. விருதுநகரில் சோகம்….!!

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காமராஜர்புரத்தில் பாக்கிய ஜோதி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சங்கீதா என்ற மகள் இருக்கிறார். இவர் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் தனது மகன் லியோனுடன் பாக்கிய ஜோதியின் வீட்டில் தங்கியிருந்தார். இதனால் சங்கீதாவின் மகன் லியோன் சில நேரங்களில் கிராமத்தில் கிளி மற்றும் புறா பிடிக்க போவதாக கூறி விட்டு சென்றுள்ளான். இந்நிலையில் லியோன் காலையில் புறா பிடிக்க செல்வதாக கூறிவிட்டு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு இருக்கக்கூடிய ஒரு தனியார் தோட்டத்து கிணற்றில் சிறுவன் லியோனின் சடலம் மிதப்பதாக பாக்கிய ஜோதிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாக்கிய ஜோதி அங்கு பகுதிக்கு சென்று லியோனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து வச்சக்காரபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |