Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உணவு தேடிச் சென்ற முதியவர்…. திடீரென நடந்த சம்பவம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

முதியவர் கிணற்றுக்குள் தவறி விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்தார்பட்டி பகுதியில் அழகர் (வயது77) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தான் வளர்க்கும் ஆட்டிற்காக குழை பறிக்க காட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கிணற்றிற்கு அருகில் குழையை பரித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக முதியவர்  கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டார்.

அதன் பிறகு அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் உடனடியாக கிணற்றில் குதித்து அழகரை பிணமாக மீட்டனர். இதனை அடுத்து அழகரின் உடலை உறவினர்கள் காவல்துறையினருக்கு தெரியாமல் நல்லடக்கம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலரான சரவணகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் அழகரின் மகன் உட்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |