விளையாடிக்கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் ஜெயகாந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சஞ்சனா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் குமரேசன் என்ற சிறுவனும் வசித்து வந்துள்ளார். அதன்பின் இரண்டு பேரும் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது திறந்தவெளி கிணற்றில் தவறி விழுந்துள்ளனர். இதை பார்த்த அவர்களின் நண்பர்கள் இருவரின் பெற்றோரிடமும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்து தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த சஞ்சனாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது அவளது உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து கிணற்றில் தவறி விழுந்த குமரேசன் கிடைக்காத காரணத்தினால் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதற்குப் பிறகு குமரேசனின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குமரேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.