கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் அதிகமான நீர்நிலைகள் நிறைந்து வருகின்றது. இந்நிலையில் குஞ்சரம் கிராமத்தில் வசிக்கும் அருணாச்சலம் என்பவர் அதே பகுதியில் இருக்கும் பொது கிணற்றில் தண்ணீர் பிடிக்க சென்ற போது எதிர்பாராவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்த இளைஞர்கள் சிலர் உடனடியாக கிணற்றுக்குள் குதித்து அருணாச்சலத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அருணாச்சலம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் அருணாச்சலத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.