Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற முதியவர்…. திடீரென நடந்த விபரீதம்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்….!!

கிணற்றில் விழுந்த முதியவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோழி குட்டை கிராமத்தில் 50 அடி ஆழம் கொண்ட தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று உள்ளது. தற்போது அந்த கிணறு வறண்டு கிடக்கிற.து இதனை அறியாமல் அதே கிராமத்தில் வசிக்கும் முதியவர் துரைசாமி எதிர்பாராதவிதமாக தவறி உள்ளே விழுந்துள்ளார்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் துரைசாமியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |