கிணற்றில் தவறி விழுந்த வாலிபரை பத்திரமாக மீட்டதால் தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள வல்லராமபுரம் பகுதியில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சங்கரன்கோவில் அருகே உள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றில் கார்த்திக் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதனால் முதுகில் பலத்த காயம் அடைந்த கார்த்திக் கிணற்றிலிருந்து வெளியே வர முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
இதனைப் பார்த்ததும் அருகிலிருந்தவர்கள் சங்கரன்கோவில் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கார்த்திக்கை கிணற்றில் கயிறு கட்டி மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இவ்வாறு கார்த்திக்கை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினரை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.