கிணற்றில் முழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுப்பம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதயகுமார் என்று தம்பி இருந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவியும் ஏழு மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் உதயகுமாரும் செல்வகுமாரும் விவசாய கிணற்றுக்கு அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக செல்வகுமார் கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தம்பி உதயகுமார் அவரை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார். அதன்பின் செல்வகுமார் கிணற்றில் தத்தளித்தவாறு மேலே ஏறி வந்துள்ளார். ஆனால் அவரை காப்பாற்ற முயன்ற உதயகுமார் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுபற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் உதயகுமாரின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.