விவசாய கிணற்றில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாக்கனூர் பகுதியில் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் விவசாய கிணறு அருகில் சக்கரவர்த்தி நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார். இதனை அறியாமல் அவரின் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
பின்னர் விவசாய கிணற்றில் ஒருவர் சடலமாக கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறந்து கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.