பாம்பைப் பார்த்து பயந்து ஓடிய விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள கடம்பூர் இந்திரா நகர் பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாய இருந்துள்ளார். இவருக்கு சத்யா என்ற மனைவி இருக்கின்றார். இதில் சிவகுமார் தனது விவசாய தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது சிவக்குமாருக்கு அருகில் பாம்பு ஒன்று வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் எதிர்பாராத விதமாக திடீரென சிவகுமார் அங்கிருந்த விவசாய கிணற்றில் தவறி விழுந்து விட்டார்.
அந்தக் கிணற்றில் தண்ணீர் இல்லாததால் உள்ளே விழுந்த சிவக்குமார் படுகாயமடைந்து மயக்க நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிவகுமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து சிவகுமாரின் மனைவி சத்யா கொடுத்த புகாரின்படி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.