Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிணற்றில் மூழ்கி உயிரிழந்த பெண்… நெகிழ வைத்த பெற்றோரின் செயல்…!!

கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த பெண்ணின் கண்களை பெற்றோர் தானம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்யாறு பகுதியில் உள்ள தும்பை கிராமத்தை சேர்ந்தவர்  நாராயணன். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். நாராயணன் தனது மகள்களுடன் பெங்களூரில் வசித்து வந்தார்.இவரது இளையமகள் சுதா(19) கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் தனது மூத்த மகளுக்கு திருமணம் நடக்க இருப்பதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு  திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக  நாராயணன் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான தும்பைக்கு வந்துள்ளார். இதற்கிடையில் தனது பெற்றோருடன்  சுதா குளிப்பதற்காக கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றுக்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் படிக்கட்டில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். நீச்சல் தெரியாததால் கிணற்றில் தத்தளித்த சுதா நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தனது மகள் இருந்த துக்கம் ஒருபுறம் இருந்தாலும் அவரது கண்களை தானம் செய்தால் பார்வை இல்லாதவர்களுக்கு பார்வை கொடுக்கலாமே என்று கருதிய அவரது பெற்றோர் தன்னார்வ அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உதவியுடன் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையினர்  சுதாவின் கண்களை தானமாக பெற்றுக்  கொண்டனர்.

Categories

Tech |