Categories
தேசிய செய்திகள்

பகீர் வீடியோ: கிணற்றின் மீது விளையாடிய சிறுவன்…. சட்டென நேர்ந்த விபரீதம்…. துரிதமாக செயல்பட்ட உறவினர்….!!!!

மத்தியப்பிரதேசம் தமோ மாவட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுவன் அர்னவ் ஜெயின் சுமார் 40 அடி கிணற்றில் தவறி விழுந்தான். இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் கிணற்றில் விழுந்த சிறுவனை பத்திரமாக மீட்டனர். அதாவது, சிறுவன் அர்னவ் ஜெயின் கிணற்றின் ஓரத்தில் நடந்து சென்றுள்ளார்.

அதன்பின் கிணற்றை மூடியிருந்த வலையில் சிறுவன் நின்றபோது, அந்த வலை அறுந்து அவர் தவறி விழுந்தார். அதனை தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்த அர்னவின் நண்பரான சன்யம் ஜெயின், குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பின் உறவினர் பவன் ஜெயின் என்பவர் உடனடியாக கிணற்றில் இறங்கி அர்னவை மீட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்து.

Categories

Tech |