கிணற்றுக்குள் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை நகரில் தாண்டா கவுண்டர் தோட்டம் உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் வாலிபர் ஒருவர் தவறி விழுந்து விட்டதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் கிணற்றுக்குள் பிணமாக கிடந்துள்ளார்.
இதனை பார்த்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாலிபரின் உடலை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் வாலிபரின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.