Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிணற்றுக்குள் பாய்ந்த லோடு ஆட்டோ…. சடலமாக மீட்கப்பட்ட கணவன்-மனைவி…. தீயணைப்பு துறையினரின் போராட்டம்….!!

கிணற்றுக்குள் லோடு ஆட்டோ பாய்ந்ததில் கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள ஆவித்திப்பாளையம் பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவில் விழாக்களில் மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு பானுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு அகல்யா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வடிவேல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்னமுத்தூர் பகுதியில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவில் அமைத்திருந்த மேடையை அப்புறப்படுத்தும் பணியை முடித்துவிட்டு லோடு ஆட்டோவில் ஜெனரேட்டர் மற்றும் மேடை பொருட்களை ஏற்றிக்கொண்டு ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

அவருடன் அவரது மனைவி மற்றும் அவரது மகளும் சென்றனர். இந்நிலையில் லோடு ஆட்டோவை வடிவேல் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சென்னாக்கல்மேடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த ராமலிங்கம் என்பவரின் தோட்டத்து கிணற்றில் பாய்ந்தது. இதில் லோடு ஆட்டோ தண்ணீரில் மூழ்கியது. இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக அகல்யா மட்டும் தண்ணீரில் நீந்தி வந்து கிணற்றின் மேல் ஏறி சத்தம் போட்டுள்ளார். இதனை பார்த்த அப்பகுதியில் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் சென்று கணவன் மனைவி இருவரையும் மீட்க முயன்றனர். ஆனால் லோடு ஆட்டோ தண்ணீரில் மூழ்கியதால் மீட்க முடியவில்லை.

இது குறித்து அவர்கள் வெள்ளக்கோவில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தண்ணீரில் மூழ்கிய லோடு ஆட்டோவை .வெளியே எடுத்தனர். அப்போது கணவன் மனைவி இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவர்களது மகளான அகல்யாவுக்கு  மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து வெள்ளகோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |