Categories
சினிமா தமிழ் சினிமா

“வேதனையாக இருக்கிறது” சாலைக்கு அவர் பெயரை சூட்டுங்கள்…. பிரபல நடிகருக்காக வருந்திய கமல்….!!

நகைச்சுவை நடிகர் நாகேஷ் பெயரை சாலைக்கு வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் நினைவு தினத்தையொட்டி உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “தனக்கென்று தனி முத்திரையைப் பதித்த நகைச்சுவை நடிகரான நாகேஷ் திரையுலகில் ஒப்பற்ற நடிகர்களில் ஒருவராவார். ஆயிரத்திற்கும் அதிகமான படங்களில் நடித்து மக்களை மகிழ்வித்த அவரை தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்றெல்லாம் புகழ்ந்தனர்.

1958ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி 2008ஆம் ஆண்டு தசாவதாரம் திரைப்படம் வரை தனது நடிப்பை வெளிப்படுத்தி சரியாக அரை நூற்றாண்டுகள் அவரது சினிமா பயணம் நீடித்தது. ஆனால் வாழும் போதும் சரி வாழ்ந்த பிறகும் சரி அவர் புறக்கணிக்கப்பட்ட மகா கலைஞனாக தான் இருந்தார். அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்து 12 வருடங்கள் ஆனபோதும் அரசு தொடர்ந்து அவரை புறக்கணித்து வருவது சக கலைஞனாக மிகுந்த வேதனையை எனக்கு கொடுக்கிறது.

நாகேஷ் அவர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக சென்னையில் இருக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும். அவரது பெயரில் விருது உருவாக்க வேண்டும். எம்ஜிஆர் அரசு தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் வளாகத்திற்குள் அவருக்கென்று ஒரு சிலையை அமைக்க வேண்டும். இது அவரது கலை பங்களிப்புக்கு கொடுக்கும் சிறிய அங்கீகாரங்களாக இருக்கும். கலைஞர்களை கௌரவிப்பது நல்லரசின் கடமை என்பதை புரிந்துகொண்டு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |