பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானாவின் திருமணத்தின் போது சுமார் 41 வருடங்களுக்கு முன் தயார் செய்யப்பட்ட கேக், ஏலத்திற்கு விடப்படவிருக்கிறது.
பிரிட்டனின் மன்னரான சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானா இருவருக்கும் கடந்த 1981 ஆம் வருடம் ஜூலை மாதம் 29ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது. அந்த சமயத்தில் 3000- திற்கும் அதிகமான விருந்தினர்கள் பங்கேற்றனர். அந்த விருந்தினர்களில் ஒருவரான நைஜல் ரிக்கட்ஸ் கடந்த வருடம் மரணமடைந்தார்.
அவர் மன்னர் சார்லஸ் திருமணத்தில் தயார் செய்யப்பட்ட 41 வருடங்கள் பழமையான கேக்கின் ஒரு பகுதியை பாதுகாப்பாக வைத்திருந்தார். தற்போது அந்த கேக் ஏலத்திற்கு விடப்பட இருக்கிறது. அந்த கேக்கின் ஒரு பகுதி சுமார் 300 இங்கிலாந்து பவுண்டுகள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதைவிட அதிக விலைக்கு ஏலம் போகும் என்று கூறப்பட்டுள்ளது. சார்லஸ்- டயானாவின் திருமணத்திற்கு 23 கேக்குகள் தயார் செய்யப்பட்டன. இதில், பழ கேக்கிலிருந்து அந்த துண்டு வெட்டி எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த கேக் ஐந்து அடுக்குகளில் சுமார் ஐந்து அடி உயரத்தில் செய்யப்பட்டது.