Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிங் கோலியை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன் ….! காரணம் என்ன….?

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை  பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர் புகழ்ந்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடரில் துபாயில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இதில்  பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதனிடையே போட்டி முடிந்த பிறகு பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வானை, விராட் கோலி கட்டித்தழுவி பாராட்டினார். இந்த நிலையில் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சனா மிர் விராட் கோலியின் இந்த செயலை புகழ்ந்துள்ளார் .

இதுகுறித்து அவர் கூறும்போது ,” இந்திய அணியின் தோல்வியை கேப்டன் விராட் கோலி பரிவோடு அருமையாக கையாண்டுள்ளார் . அவரது விளையாட்டு உணர்வை மதிக்கிறேன் .அவர் நடந்து கொண்டதை  பார்க்க உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது . இதுபோன்ற செயல் மூலமாக முன்னணி வீரர்கள் முன்மாதிரியாக விளங்குகின்றனர். மேலும் அடுத்த ஆட்டத்தில் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டு வந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அதோடு இத்தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மீண்டும் ஒருமுறை மோதுவதை பார்க்க முடியும் என நம்புகிறேன் ” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |