டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதம் கடந்த விராட் கோலியின் சாதனையை ரோகித் சமன் செய்துள்ளார்.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.இப்போட்டியில் 2-வது இன்னிங்சில் தொடக்க வீரர்களாக கே.ல்.ராகுல் – ரோஹித் சர்மா ஜோடி களமிறங்கினர்.அதோடு இப்போட்டியில் ரோகித் சர்மா முக்கிய சாதனை படைத்துள்ளார் அப்போது 36 பந்துகளை சந்தித்த அவர் 5 சிக்சர், ஒரு பவுண்டரி என 55 ரன்கள் குவித்தார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதம் கடந்த விராட் கோலியின் சாதனையை ரோகித் சமன் செய்துள்ளார். அதோடு நேற்று முன்தினம் நடந்த போட்டியில் 25-வது அரைசதத்தை கடந்த ரோகித் சர்மா இதற்கு முன்பாக 4 சதங்கள் என 29முறை 50 க்கு மேல் ரன்கள் குவித்து கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார். அதோடு இந்திய அணியில் விராட் கோலி 29 முறை 50 க்கு மேலாக ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ,டேவிட் வார்னர் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர் .