Categories
அரசியல் மாநில செய்திகள்

கிங் ஆன எடப்பாடி… ”டாப் கியரில் எகிறிய தமிழகம்”… ஹீரோ ரேஞ்சுக்கு போய்ட்டாரு …!!

தமிழக அரசின் மீது இருந்து வந்த விமர்சனங்களை இன்று காலி செய்து எடப்பாடி அரசு அசத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகின்றது. நாளையோடு மூன்றாவது கட்ட ஊரடங்கு நிறைவடையும் நிலையில் கொரோனாவின் தாக்கம் சீனாவை மிஞ்சி உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடக 12ஆவது இடத்தில உள்ளது. இதே போல் தினமும் மாநில அளவிலும் கொரோனா பாதிக்கப்பு எண்ணிக்கை கணக்கில் அடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. கட்டுக்கடங்காமல் செல்லும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடே பெஸ்ட்:

நாட்டிலேயே அதிக பாதிப்பை வர்த்தக நகரான மகாராஷ்டிரா சந்தித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக அதிக கொரோனா பாதிப்பை சந்தித்த தமிழகமாக தமிழகம் இருக்கின்றது. தமிழகத்தில் தொடக்க முதலே கொரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பாக இருந்து வந்தது நாம் அனைவருக்கும் தெரியும். நாட்டிலேயே அதிக பரிசோதனை மையங்கள் வைத்து, அதிகமான சோதனை செய்த மாநிலமாக தமிழகம் விளங்குகின்றது.

பாராட்டை பெற்ற தமிழகம்:

தமிழக சுகாதாரத்துறை மற்றும் தமிழக அரசு கொரோனாவுக்கு எதிரான போரை சிறப்பாக நடத்தி வருகின்றது. இதனால் தான் தமிழகத்தில் இறப்பு வீதம் மிகவும் குறைவாகவே உள்ளது. மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் தமிழகத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கை இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கின்றது. அந்த அளவுக்கு 0.69 % என்ற அளவில் உள்ளது. இதனால் தமிழக அரசு பிரதமர் மோடி  மற்றும் மத்திய சுகாதாரத் துறையின் பாராட்டை பெற்றது.

மதுக்கடைகள்:

மத்திய அரசு ஊரடங்கில் தளர்வுகளை கொண்டு வந்ததையடுத்து தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. உயர்நீதிமன்றம் மதுக்கடையை அடைக்க உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று தமிழக அரசு உத்தரவு பெற்றது அனைவரையும் கண்டிக்க வைத்தது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் கண்டித்தன.

வீசப்பட்ட விமர்சனம்:

கொரோனா பாதிப்பின் மையமாக விளங்கிய சென்னையில் இருக்கும் கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக பல மாவட்டங்களுக்கு கொரோனா பரவி மக்களை அச்சம் கொள்ள வைத்தது. இதனால் தமிழக அரசு கட்டுப்படுத்தத் தவறி விட்டது. ஊரடங்கு முறையாக அமல்படுத்தப்படவில்லை. கொரோனவை கட்டுப்படுத்த தவறிய அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க கவனம் செலுத்தி வருகின்றது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின. இது ஆளும் அரசுக்கு பெருத்த தலைவலியாக அமைந்தது.

தூள்கிளப்பிய சுகாதாரத்துறை:

இந்த நிலையில்தான் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறதால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது. ஒருபக்கம் பாதிப்பு அதிகரித்த நிலையில் மறுபக்கம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் 3500 தாண்டியுது. இன்று ஒரே நாளில் மட்டும் இதுவரை இல்லாத அளவாக 933 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது தமிழக அரசை தமிழக அரசின் சுகாதார நடவடிக்கையை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.

இந்தியாவிலே மாஸ்:

நேற்று ஒரே நாளில் 359 பேர் குணமடைந்த நிலையில் இன்று ஒரே நாளில் 939 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் நாடு முழுவதும் எந்த ஒரு மாநிலமும் நிகழ்த்தாத சாதனையை தமிழகம் நிகழ்த்திக்காட்டியது. ஒரே நாளில் அதிகமானோர் குணமடைந்த மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வந்தது. அங்கு  கடந்த 11ம் தேதி 587 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருந்ததை தமிழகம் கடந்தது.

கிங் ஆன எடப்பாடி:

டாஸ்மாக் மதுக்கடை திறப்பு, கோயம்பேட்டில் கொரோனவை பரவ விட்டது என்று தமிழக அரசு விமர்சனங்களை பெற்று வந்தநிலையில் இன்று ஒரே நாளில் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. தமிழக அரசின் சுகாதாரத் துறைக்கு கிடைத்த இந்த வெற்றி தமிழக மக்களின் அச்சத்தை முற்றிலும் போக்கியுள்ளது. ஏறக்குறைய 1000 என்ற அளவில் ஒரே நாளில் குணப்படுத்த முடிந்த தமிழக அரசால் சிகிச்சை பெற்று வரும் அனைவரையும் விரைவில் குணப்படுத்த முடியும் என்று நிரூபித்து காட்டியுள்ளது. மொத்தத்தில் எடப்பாடியை கிங் என்ற ரேஞ்சுக்கு உயர்த்தியுள்ளது தமிழக சுகாதாரத்துறை. 

Categories

Tech |