நெதர்லாந்தின் அரசர் வில்லெம்-அலெக்சாண்டர், ராணி மாக்சிமா இருவரும் அழைத்ததால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அந்நாட்டிற்கு மூன்று நாட்கள் பயணம் சென்றிருக்கிறார்.
நெதர்லாந்தின் அரசரான வில்லம் அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்ஸிமோ இருவரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திற்கு அழைப்பு விடுத்தனர். எனவே, அந்நாட்டிற்கு ஜனாதிபதி பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 1988 ஆம் வருடத்தில் ஜனாதிபதியாக இருந்த ஆர்.வெங்கட்ராமனுக்கு பின் சுமார் 34 ஆண்டுகள் கழித்து இந்திய ஜனாதிபதி நெதர்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார்.
மன்னர் வில்லம் அலெக்சாண்டர், நேற்று முன்தினம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திற்கும் அவரின் மனைவிக்கும் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருக்கும் அரசாங்கத்தின் அரண்மனையில் விருந்தளித்து உபசரித்திருக்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்த வரவேற்கும் அன்பான உபசரிப்பிற்கும் நன்றி கூறியிருக்கிறார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, தனக்கும் தன் தூதுக்குழுவினருக்கும் அன்பான உபசரிப்பு கிடைத்தது, என்னை அதிகமாக பாதித்திருக்கிறது. இரண்டு நாட்டு தூதரக உறவுகளின் 75வது வருட முடிவை இணைந்து கொண்டாடும் இந்த வருடம் நம் இருதரப்பு நட்பில் ஒரு மைல் கல்லை எட்டுகிறது என்று கூறியிருக்கிறார்.