கம்போடியாவில் கண்ணிவெடிகளை கண்டறிவதில் கிங்காக செயல்பட்ட மகாவா என்னும் எலி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்போடியாவில், மகாவா என்னும் எலி, சுமார் ஐந்து வருடங்களாக நூற்றுக்கும் அதிகமான கண்ணிவெடிகளை கண்டுபிடித்து, நூற்றுக்கணக்கான மக்களின் உயிரை காத்திருக்கிறது. “ஹீரோ ரேட்” என்று பிறரால் அழைக்கப்பட்டு வரும் இந்த எலி, APOPO என்ற சர்வதேச தொண்டு நிறுவனத்தில் உயிரிழந்திருக்கிறது.
கம்போடியாவில், பல வருடங்களாக நடந்த உள்நாட்டுப் போரில், ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு அதிகமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கிறது. இதில், சிக்கி 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கை மற்றும் கால்களை இழந்திருக்கிறார்கள். எனவே, தான்சானியாவில் பிறந்த இந்த எலி, கடந்த 2016ம் வருடத்தில் கண்ணிவெடிகளை கண்டுபிடிப்பதற்காக கம்போடியாவிற்கு வரவழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.