ஒரு சாப்பாடு வாங்கினால் இரண்டு சாப்பாடு இலவசம் என்ற விளம்பரத்தை பார்த்து ஒரு வயதான பெண் 50 ஆயிரத்தை இழந்துள்ளார்.
பெங்களூர், யெலச்சனஹள்ளியில் வசிக்கும் சர்மா பேஸ்புக்கில் விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் 250 விலையில் ஒரு உணவை வாங்கினால் இரண்டு சாப்பாடு இலவசம் என குறிப்பிட்டிருந்தது. அதை பார்த்து அந்த நம்பருக்கு அழைத்தபோது ஒரு நபர் பேசியுள்ளார். ஆர்டர் முன்பதிவு செய்ய ரூபாய் 10 முன்பணம் செலுத்த வேண்டும். எனக் கூறியுள்ளார். மீதமுள்ள தொகையை உணவு கொடுக்கும் போது செலுத்த வேண்டும் என தெரிவித்தார். அதற்கு ஒரு படிவத்தை நிரப்ப மொபைலில் தொலைபேசியில் ஒரு இணைப்பு அனுப்பப்பட்டது.
அதில் வங்கி விவரங்கள் கேட்கப்பட்டது. அதில் தனது டெபிட் கார்டு மற்றும் பின் என்னை அதில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அவரது கணக்கில் இருந்து 49 ஆயிரத்து 996 கொள்ளையடிக்கப்பட்டது. மீண்டும் அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது அந்த எண் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதனால் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஒரு 250 ரூபாய்க்கு இரண்டு சாப்பாட்டிற்கு ஆசைப்பட்டு 50 ஆயிரத்தை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதெல்லாம் இதுபோன்ற குற்றங்கள் அதிக அளவில் நடந்து கொண்டு வருகின்றது.