கினியாவில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் புதிய வகை வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான கினியாவில் புதிதாக வைரஸ் தொற்று ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த புதிய வகை வைரஸான மார்பர்க் விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவக்கூடியதாகும். அதுவும் குறிப்பாக வௌவால்களில் இருந்து பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 88 சதவீத இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது.