இளம்வயதிலேயே பல்வேறு உலக நாடுகளுக்கு பயணம் செய்த அமெரிக்கா பெண் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த 23 வயது பெண் லெக்சி அல்ஃபோர்ட். இவர் உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கு இளம் வயதிலேயே சென்ற பெண்மணி என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார். மேலும் இதற்காக இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். குறிப்பாக இவர் தனது பதினெட்டு வயதிலேயே 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.
ஏற்கனவே 2013 ஆம் ஆண்டு 24 வயதான ஜேம்ஸ் அஸ்க்வித் என்பவர் படைத்த சாதனையை லெக்சி முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்பொழுது 196 நாடுகளுக்கு பயணித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது போன்ற பயணங்களுக்காக இவர் இந்திய தொகையில் சுமார் 1.5 கோடி ரூபாய் செலவிட்டுள்ளார்.