Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“சும்மா பார்க்க தான் போனேன்” விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உறவினரின் புதிய கிணற்றை பார்க்க சென்ற விவசாயி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கன்னிப்பட்டி கிராமத்தில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது உறவினர் காவேரி என்பவரின் தோட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிணற்றை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அதை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கோவிந்தசாமி தவறி உள்ளே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த கோவிந்தசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் கோவிந்தசாமியின் உறவினர் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்பின் அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |