கிணற்றில் முதியவர் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள குள்ளம்பாளையத்தில் ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயக் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரங்கசாமி தோட்டத்து வேலைக்கு வராததால் ராஜமணி அவரை தேடி சென்ற போது கிணற்றின் அருகில் ரங்கசாமியின் வேட்டி மற்றும் துண்டு கிடந்ததை பார்த்து சந்தேகமடைந்த அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அந்தத் தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரங்கசாமியை கிணற்றில் தேடி சடலமாக மீட்டுள்ளனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.