கிராம நிர்வாகி பணியாளர் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளனர் .
வேலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னை கிராமத்தில் கவிதா என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகின்றார். இவரிடம் பொன்னை கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பட்டா பெயர் மாற்றம் செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார்.
அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கவிதாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். இந்நிலையில் உதவி கலெக்டர் கணேஷ் கிராம நிர்வாகி பணியாளர் கவிதா என்பவர் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக பணிநீக்கம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.