கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கலெக்டர் எல்லோரும் தடுப்பூசி போட்டு உள்ளார்களா என ஆய்வு செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் எல்லா பகுதிகளுக்கும் நேரில் சென்று பொதுமக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் பேரூராட்சியில் இருக்கும் 18 வார்டுகளிலும் கலெக்டர் ஸ்ரீதர் வீடு வீடாக சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது வீட்டில் வசிக்கும் பொதுமக்களிடம் நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளீர்களா, அப்படி தடுப்பூசி போடவில்லை என்றால் உடனடியாக சென்று அதை செலுத்தி கொள்ளவும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
இதனை அடுத்து அங்கிருந்த சுகாதாரத்துறை அலுவலரிடம் பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் எங்கெங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை எத்தனை நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பின் இன்னும் எவ்வளவு நபர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என கேட்டு அறிந்துள்ளார். இதற்கு அதிகாரி 10,000 நபர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் மீதம் இருக்கும் 5,591 நபர் தடுப்பூசி போடாமல் இருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து அவர்களுக்கும் விரைவாக தடுப்பூசி போடப்படும் என அதிகாரிகள் கலெக்டரிடம் கூறியுள்ளனர். அதற்கு ஒரு வாரத்திற்குள் மீதமிருக்கும் பொது மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். பின்னர் எங்கெல்லாம் முகாம்கள் அமைத்து உள்ளீர்கள் என பொதுமக்களுக்கு தெரியப்படுத்துங்கள் என கலெக்டர் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.