Categories
தேசிய செய்திகள்

சோப்பால் கைகளை கழுவ வேண்டுயதன் அவசியம் என்ன? வீடியோவாக வெளியிட்ட கிரண் பேடி!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த நிலையில் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் விழிப்புணவு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் சோப் கொண்டு கைகளை நன்கு கழுவ வேண்டியதன் அவசியத்தை கூறும் வீடியோவை புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் சோப் நனைத்த விரலால் அழுக்கு நீரை தொடும்போது அந்த நீரில் உள்ள தூசு அழுக்குகள் உடனடியாக விலகி செல்கின்றன. இந்த செயல்முறையை ஒரு ஆசிரியர் தன்னுடைய பள்ளி குழந்தைகளுக்கு செய்து காட்டியுள்ளார்.

அதன் வீடியோவை புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஏன் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு உங்கள் கைகளை கழுவ வேண்டும் என்பதை இந்த வீடியோவில் ஒரு ஆசிரியை அவரது மாணவருக்கு கற்றுக்கொடுப்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இதுகுழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |