Categories
தேசிய செய்திகள்

இந்து சமாஜ் கட்சியின் தலைவரானார் கிரண் திவாரி.!!

இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி கொலை செய்யப்பட்டதை அடுத்து அவரது மனைவி கிரண் திவாரி அக்கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் செயல்பட்டுவரும் இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி, அக்டோபர் 18-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கமலேஷ் வீட்டின் வெளியே உள்ள கண்காணிப்பு படக்கருவியின் பதிவை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்குரிய மூன்று நபர்கள், கையில் இனிப்புப்பைகளுடன் வீட்டிற்குள் சென்றது தெரியவந்தது.

Image result for The Hindu Samaj Party

அதையடுத்து இந்ச் சம்பவம் தொடர்பாக காவல்துறை, ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தியது. விசாரணையில், மதம் தொடர்பாக கமலேஷ் திவாரி கூறிய சர்ச்சைக்குரிய சில கருத்துகளுக்கு பழிவாங்கும் நோக்கத்தில் இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இந்து சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த கமலேஷ் திவாரி உயிரிழந்ததை அடுத்து அக்கட்சியின் தலைவராக கமலேஷ் திவாரியின் மனைவி கிரண் திவாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |