பிரதமோடிக்கு புதுசேரி ஆளுநர் கிரண்பேடி வாழ்த்து தெரிவித்துள்ளார் .
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது .நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆனார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரான நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் .மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. மென்மேலும் இந்தியாவை வளர்ச்சி அடையச் செய்ய ஒவ்வொரு தனிமனிதனும் அரசுடன் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.