Categories
உலக செய்திகள்

ஒரு வருடம் கழித்து… மீண்டும் பள்ளி செல்லும் கிரேட்டா தன்பர்க்…!!

சுற்றுசூழல் ஆர்வலராக இருந்த 17 வயது கிரேட்டா தன்பர்க், ஒரு வருடத்திற்கு பிறகு பள்ளியில் சேர உள்ளார்.

சென்ற வருடம் ஜூன் மாதம் தனது பள்ளிக் கல்வியை பாதியிலேயே நிறுத்துவிட்டு உலக வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு சார்பான போராட்டங்களை கிரேட்டா தன்பர்க் முன்னெடுத்து செயலாற்ற தொடங்கினார். இதன் காரணமாக  பல்வேறு நாடுகளுக்கு பிரச்சாரம் செய்ய பயணத்தை தொடர்ந்தார். அதனால் அவர் பள்ளிக்குச் செல்லாமல் தொலைதூர கல்வி முறையில் பாடங்களை கற்று வந்தார். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இந்தப் பதினேழு வயது சிறுமி சுற்றுச்சூழல் மீது மிகுந்த ஆர்வம் கொண்டதால் 2018 ஆம் ஆண்டு அது தொடர்பான போராட்டங்களில் தனி ஒரு ஆளாக நாடாளுமன்றம் முன்பு நின்று போராடினார்.

இந்தப் போராட்டத்தில் அவர் பேசிய பேச்சுக்கள் உலக மக்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை குவித்த வண்ணம் இருந்தது. இதேபோல் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் ஐநா சபையின் உச்சி மாநாட்டில் காலநிலை மாற்றத்தைக் குறித்து அவர் பேசிய பேச்சுக்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் உலக தலைவர்களை குறித்து கடுமையான விமர்சனம் செய்தார். இந்த விமர்சனம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது.

இந்நிலையில் சுற்றுச்சூழல் காலநிலை மாறுபாட்டிற்காக அவர் மேற்கொண்ட பிரச்சாரத்தை தொடர்ந்து ஒரு வருடம் கழித்து கிரேட்டா தன்பர்க், தற்போது மீண்டும் பள்ளி திரும்ப இருக்கிறார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மீண்டும் பள்ளிக்கு செல்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனவும், ஸ்கூல் பேக் அணிந்தவாறு சைக்கிளில் அமர்ந்து கொண்டு அவர் எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். ஆனால் அவர் எந்த பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்க போகிறார் என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

Categories

Tech |