கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவது மட்டுமின்றி, கிறித்துவ சமயத்தின் தியாகிகள் மற்றும் புனிதர்களுக்கு மரியாதை அளிக்க, படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக என பல பேரின் பங்களிப்புகளையும் நினைவுபடுத்தும் பண்டிகையாக இருக்கிறது. இந்த பண்டிகை கொண்டாட்டமானது இயேசுவின் பிறந்த தினம் துவங்கி, அடுத்த 12 நாட்கள் வரையிலும் நீடிக்கிறது. 12 நாட்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மற்றும் ஒவ்வொரு நாளின் முக்கியத்துவம் குறித்து நாம் தெரிந்துகொள்வோம்.
முதல் நாள்
மேற்கத்திய திருச்சபை மரபு அடிப்படையில், 12 நாட்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டப்படுகிறது. இதில் இயேசுகிறிஸ்து பிறந்த டிச,.25ம் தேதியன்று கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் முதல் நாளாக கருதப்படுகிறது.
2-ஆம் நாள்
செயின்ட் ஸ்டீபன் தினம் ஆக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துவ சமயத்தில் உயிர்துறந்த முதல் தியாகியான ஸ்டீபனின் நினைவாக டிச.26 அன்று பண்டிகையின் 2-வது நாள் கொண்டாடப்படுகிறது.
3-ஆம் நாள்
டிச.,27 அன்று, கிறிஸ்துமசின் 3வது நாள் இயேசு பிரானின் 12 சீடர்களில் இளையவரான புனிதஜான் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது
4ஆம் நாள்
டிசம்பர் 28 அன்று அப்பாவிகள் தினம் (அ) சைல்டர்மாஸ் என கூறப்படுகிறது. பீஸ்ட் ஆஃப் தி இன்னொசன்ஸ் என்ற இந்நாள், கிங் ஹராடால் பெத்லகேமில் படுகொலைசெய்யப்பட்ட குழந்தைகளின் நினைவாக கொண்டாடப்படுகிறது.
5ஆம் நாள்
கத்தோலிக் சர்ச் மற்றும் அங்கிலிக்கன் கம்யூனிசம் போன்ற இருவராலும் ஒரு தியாகியாக கருதப்பட்ட செயின்ட் தாமஸ் பெக்கட்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் டிச,.29 அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் 5வது நாள் கொண்டாடப்படுகிறது.
6ஆம் நாள்
பெனெடிக்டின் துறவியான செயின்ட் எக்வின் நினைவு நாளே டிச,.30ம் தேதி. இது கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் 6வது நாளாக இருக்கிறது.
7ஆம் நாள்
New Year, ஈவ் என புத்தாண்டு கொண்டாட்டத்தின் முந்தைய நாளாக டிச..31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. டிச,.31-ஐ உலகம் முழுவதிலும் புத்தாண்டின் முந்தைய நாளாக கொண்டாட்டங்கள் நிகழ்ந்தாலும, இது 12 நாள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஒரு அங்கம் என்பது கவனிக்கத்தக்கது.
8ஆம் நாள்
ஜன,.1 இயேசுவின் அன்னையான மதர்மேரியின் நினைவாக கொண்டாடப்படுகிறது.
9ஆம் நாள்
ஜன,.2ம் தேதியன்று செயின்ட் பேசில் மற்றும் செயின்ட் கிரகோரி நாசியான்சென் போன்றோரின் நினைவாக கொண்டாடப்படுகிறது.
10ஆம் நாள்
புனித இயேசு பெயரால் விருந்துபடைத்து கிறிஸ்மஸ் பண்டிகையின் 10-வது நாள் ஜன,.3 அன்று கொண்டாடப்படுகிறது.
11ஆம் நாள்
கிறிஸ்தவ சகோதரர்களின் முதல் அமெரிக்க சபையான சிஸ்டர்ஸ் ஆப் சாரிட்டி நிறுவிய செயின்ட் எலிசபெத் ஆன் செடோனின் நினைவாக ஜன,.4ம் தேதி கொண்டாடப்படுகிறது.
12 ஆம் நாள்
கிறிஸ்துமஸ் பண்டிகையின் கடைசிநாள் ஜனவரி 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் முதல் அமெரிக்க பிஷப் செயின்ட்ஜான் நியூமான் அவர்களின் நினைவாக கொண்டாடப்படுகிறது.