மனிதர்கள் செய்யகூடிய பாவங்களில் இருந்து அவர்களை மீட்க மனிதனாகவே அவதரித்தவர் தான் இயேசு. இவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தவர். அவரின் பிறப்பு விழா தான் கிறிஸ்துமஸ் ஆகும். கிறிஸ்துவத்தின் முதல் 2 நூற்றாண்டுகளில் இயேசுவின் பிறந்தநாளை அங்கீகரிப்பதற்குப் பல்வேறு எதிர்ப்புகள் வந்துகொண்டிருந்தது. எனினும் அதையெல்லாம் டிச,.25ஆம் தேதியன்று கிறிஸ்து பிறப்பு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த பண்டிகையின் போது கிறிஸ்துமஸ் மரம வைப்பதற்கு பல்வேறு கதைகள் சொல்லப்படுகிறது. ஆனால் முதன் முதலில் கிறிஸ்துமஸ் மரங்கள் வைக்கும் பழக்கம் ஜெர்மனியில் தான் தோன்றியதாக கூறப்படுகிறது. கி.பி.1000-ல் போனிபேஸ் என்ற பாதிரியார் மதபோதனை முடித்து திரும்பிக் கொண்டிருக்கையில், ஒரு குறிப்பிட்ட இனமக்கள் யோக் மரத்தை வழிபடுவதை கண்டார். இதுபோன்ற வழிபாடுகளை தடுக்க நினைத்து அவர் அந்த மரத்தை வெட்டினார்.
ஆனால் சில தினங்களிலேயே அதே இடத்தில் மீண்டும் யோக் மரம் வளர துவங்கியது. இதனை பார்த்த போனிபேஸ், இந்நிகழ்வினை ஏசுவின் உயிர்தெழுதல் நிகழ்வுடன் ஒப்பிட்டு தன் போதனைகளை துவங்கியதாகவும், அதன் பிறகே கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கம் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல் 1611 ஆம் வருடம் சிலேசிய டச்சஸ் என்பவர்தான் கிறிஸ்துவ வழிபாட்டில் மெழுகுவர்த்தியை பயன்படுத்தியதாக கிறிஸ்தவ வரலாற்று நூல்கள் கூறுகிறது.