நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கனெக்ட் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சென்ற ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. அவ்வாறு திருமணமாகி சில மாதங்களான நிலையில், வாடகைத் தாய் வாயிலாக இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டதாக அவர்கள் அறிவித்தனர்.
இதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு சில நாட்களிலேயே நயன்தாரா தரப்பிலிருந்து முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்து தன் மனைவி நயன்தாரா மற்றும் இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டு உள்ளார். அவற்றில் இரட்டை குழந்தைகளை உயிர், உலகம் என குறிப்பிட்டு நயன்தாரா, விக்கி குடும்பத்தின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
View this post on Instagram