Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த யானை…. நாசம் செய்த பொருட்கள்…. விரட்டியடித்த பொதுமக்கள்….!!

பர்கூரில் ஒற்றை யானை புகுந்து வீடு, காரை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் கொங்காடை மலைக்கிராமத்திற்கு நள்ளிரவில் யானை ஒன்று புகுந்துள்ளது. அப்போது ராமன் என்பவரது வீட்டிற்கு அருகில் யானை வந்ததால் அங்கு உள்ள நாய்கள் குறைக்கத் தொடங்கியது. இதனால் வெளியே வந்து பார்த்த ராமன் யானை நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதன் காரணமாக ராமன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்து வெளியே வராமல் பயத்துடன் பதுங்கி இருந்தனர்.

அப்போது வீட்டிற்கு முன்பு வைத்திருந்த பலாப்பழத்தையும், உணவு பொருட்களையும் யானை தன் துதிக்கையால் எடுத்து தின்றுள்ளது. மேலும் வீட்டிற்கு முன் உள்ள பொருட்கள், கூரையை யானை எடுத்து சேதப்படுத்தியது. இதனையடுத்து யானை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரை தனது துதிக்கையால் நாசம் செய்தது. இந்த சத்தம் கேட்டு கிராம மக்கள் அங்கு திரண்டு யானையை காட்டுப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்பின் தகர டப்பா வைத்து ஒலி எழுப்பியும், தீப்பந்தத்தை கையில் ஏந்தியும் யானையை காட்டுப்பகுதிக்குள் பொதுமக்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு விரட்டியடித்தனர்.

Categories

Tech |