இசையமைப்பாளர் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் காதல் பற்றி வெளியான தகவல் உண்மையில்லை என்று கீர்த்தி சுரேஷ் தந்தை கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் கீர்த்திசுரேஷ் அறிமுகமான முதல் படம் இது என்ன மாயம். இதற்கடுத்து திரையுலகில் முன்னணி நடிகர்களான விஜய் சூர்யா விக்ரம் விஷால்மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். மேலும் கீர்த்தி சுரேஷ் “மகாநடி” என்னும் படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். தற்போது உருவாகிவரும் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துடன் நடித்துள்ளார். இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத்தும் கீர்த்தி சுரேசும் காதலிப்பதாக இணையதளத்தில் தகவல் வெளியானது.
சில மாதங்களுக்கு முன்பு இருவரும் நெருக்கமாக சேர்ந்து எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு இடையில் இருவரும் திருமணம் செய்யப்போவதாக கூறப்பட்டது. இதனைப்பற்றி அனிருத்தும் கீர்த்தி சுரேசும் எந்தவித கருத்தும் உறுதிப்படுத்தாமல் இருந்தனர். இந்த விதமான காதல் கிசுகிசு பற்றி கீர்த்தி சுரேஷின் தந்தையும் தயாரிப்பாளருமான சுரேஷ்குமார் விளக்கம் தெரிவித்தார். அவர் கூறியது கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத் இடையில் எந்தவித காதலும் இல்லை. காதலிப்பதாக வெளியான தகவல் கூட உண்மை இல்லை. இதுபோன்ற பல வதந்திகளும் கிசுகிசுக்களும் இணையதளத்தில் பரவி வருகிறது என்று தெரிவித்தார் .