Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கிசான் முறைகேடு…. ”ரூ.105 கோடி பறிமுதல்”… சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை

கிசான் திட்ட முறைகேட்டில் இதுவரை ரூ.105 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் திட்ட முறைகேடு தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விசாரணையின் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறார்கள். தகுதியற்ற பல விவசாயிகள், அதிகாரிகள் மற்றும் அவுட்சோர்சிங் வாயிலாக சட்டவிரோத பதிவு செய்துகொண்டு பயனடைந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் 13 குற்ற வழக்குகளை பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த முறைகேடு தொடர்பாக தமிழகத்தில் 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 105 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்படுள்ளதாகவும், இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாகவும்,  அதேபோல முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் 100 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுளர்கள் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |