உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த தினத்தில் காதலர்கள் தங்களுக்கிடையில் ரோஜாப்பூக்கள், இனிப்புகள், வாழ்த்து அட்டைகள் ஆகியவற்றை பரிமாறி கொண்டு காதலர் தினத்தை கொண்டாடுவார்கள். அந்தவகையில் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 14 ஆம் தேதி வரை வேலன்டைன் வீக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை காதலர் தின வாரம் எனவும் அழைப்பர். காதலர் தின வாரம் ரோஸ் டே-வில் ஆரம்பித்து ப்ரப்போஸ் டே, சாக்லெட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, இறுதியாக கிஸ் டேவில் முடிகிறது.
இந்த கிஸ் டே-வில் காதலர்கள் தங்களுக்கு இடையில் உள்ள அன்பை முத்தத்தின் மூலம் பரிமாறிக் கொள்வர். இதுவே இந்த நாளின் சிறப்பாகும். காதலர் மட்டுமின்றி தாத்தா பாட்டிகள் பேரன் பேத்திகள் அவர்களுடைய பெற்றோர்கள் அனைவரும் தங்களின் அன்பை முத்தத்தின் வாயிலாக பரிமாறிக்கொள்வார்கள். சிலர் தங்களுடைய செல்லப் பிராணிகளுடன் கிஸ் டேவை கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் ட்விட்டரில் #KissDay என்ற ஹாஷ்டேகை பதிவிடுகின்றனர்.