கிசுகிசுவால் பல மற்ற முடியாத பாதிப்புகள் ஏற்படும் என நடிகை வேதிகா சாடியுள்ளார்.
தமிழில் ‘மதராஸி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வேதிகா. அதன்பின் முனி, காளை, பரதேசி, காவியத்தலைவன், போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜீத்து ஜோசப் இயக்கிய ‘தி பாடி’ என்ற படத்தின் மூலம் இந்தியில் இம்ரான் ஹாஸ்மியுடன் நடித்து அறிமுகமானார். இந்நிலையில் இவர் சமீபத்தில் கிசுகிசு செய்திகள் எழுதுபவர்களை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில் “சிலர் ஏன் இது போன்ற செய்திகளை எழுதுகிறார்கள் என தெரியவில்லை, ஏனெனில் அது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துபவை.
இப்படி இவர்களைப்பற்றி வேறு யாராவது கிசுகிசு எழுதினால் அவர்கள் தாங்கிக் கொள்வார்களா? அனைவருக்கும் வாழ்க்கை உள்ளது. எங்களுக்கும் மன அழுத்தம், குடும்ப பிரச்சனைகள் மற்றும் தொழிலின் மோசமான நிலை போன்றவை உண்டு. ஆனால் இதையெல்லாம் பொழுதுபோக்கிற்காகவும், மற்றவர்களின் கவனத்தை ஈர்பதற்க்காகவும் செய்தியாக மாற்றக்கூடாது. ஒருவரின் சோகத்தையும், வழியையும் வைத்து வருவாய் ஈட்டுவது முறையற்ற செயல் என்று நான் நினைக்கிறேன். அவ்வாறு எழுத எழுதப்படுபவை சரிசெய்ய முடியாத பாதிப்பை ஒருவருக்கு ஏற்படுத்தலாம். நடிகர் மட்டுமல்ல, எவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் இப்படி கிசு கிசு செய்திகள் வரக்கூடாது” என்று வேதிகா கூறியுள்ளார்.