சமையலறை டிப்ஸ்
கேஸ் சிலிண்டரை ஒரு தெர்மாகோல் ஷீட்டின் மீது வைத்தால், தரையில் கீரல், கரை ஏற்படுவதை தடுக்கலாம் .
பஜ்ஜி செய்வதற்கு கடலை மாவு, அரிசி மாவுக்கு பதிலாக, கடலைப் பருப்பையும் பச்சரியையும் ஊறவைத்து, பெருங்காயம், மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து அரைத்துச் செய்தால், சுவை அதிகமாக இருக்கும் .
ஜவவ்ரிசி பாயசம் செய்வதற்கு முன் ஜவ்வரியை லேசாக வறுத்து வெந்நீரில் அரை மணி நேரம் ஊறவிட்டு பாயசம் செய்தால், விரைவில் வெந்துவிடும்.
நமத்துப்போன பிஸ்கட்டுகளை ஒரு ப்ளாஸ்டிக் பையில் போட்டு, ஒரு மணி நேரம் ஃப்ரிஜ்ஜில் வைத்து எடுத்தால் கரகர, மொறுமொறுவென இருக்கும்.