சமையலறை டிப்ஸ்
முந்திரிப் பருப்பு, பாதாம், பிஸ்தா போன்றவற்றை பாலில் ஊறப்போட்டு பின் கேக் செய்யும்போது சேர்த்தால், கேக்கிலிருந்து உதிர்ந்து விழாமல் இருக்கும்.
புதிதாக அரைத்த மிளகாய்த் தூளில், சிறிது சமையல் எண்ணெய் விட்டு கிளறி வைத்தால், கார நெடி இல்லாமல் சுவை கூடும்.
உளுந்து வடைக்கு மாவு அரைக்கும்போது, முதலில் மிக்ஸியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு தடவிக்கொண்டு பிறகு உளுந்தைப் போட்டு அரைத்தால் ஒட்டாமல் வரும்.
மசால்வடை மாவில் நீர் அதிகமாகி விட்டால் இரண்டு ரொட்டித் துண்டுகளை மிக்ஸியில் பொடியாக அரைத்து, வடை மாவுடன் சேர்த்தால் போதும் . வடை அருமையாக வரும் .
கூட்டு , பருப்பு, சாம்பார் செய்யும் போது லேசாக அடிப் பிடித்துவிட்டால் அதை வேறு பாத்திரத்துக்கு மாற்றி, எலுமிச்சை சாறு ஊற்றிக் கிளரினால் தீய்ந்த வாசனை வராது.