சமையலறை டிப்ஸ்
மிளகாய்- பஜ்ஜி செய்யும்போது, மிளகாயை நீளவாக்கில் கீறி சிறிது உப்பு, இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு விட்டு எண்ணெயில் போட்டு பஜ்ஜி செய்தால் டேஸ்டாக இருப்பதோடு, காரமும் இருக்காது.
காப்பர் பாட்டம் உள்ள பாத்திரத்தில் ஐஸ்கிரீம் கலவையை ஊற்றி வைத்தால், ஐஸ்கிரீம் சீக்கிரத்தில் கெட்டியாகி விடும்.
பருப்பு வடைக்கு அரைக்கும்போது, ஊற வைத்த பருப்பு மற்றும் பொருட்களுடன் ஒரு டேபிள் ஸ்பூன் புழுங்கலரிசி சேர்த்து அரைத்து மாவில் சிறிது நெய் சேர்த்து வடை தட்டி சுட்டால் வடை கரகரப்பாக நல்ல சுவையுடன் இருக்கும்.
சமோசாவை பொறிப்பதற்கு முன்பு, ஒரு சிட்டிகை சோடா உப்பை எண்ணெய் காய்ந்ததும் போட்டு, பொரிய விட்டு பின் சமோசாவைப் பொறித்தெடுத்தால் மொறுமொறுப்பு மாறாமல் இருக்கும்.