சமையலறை டிப்ஸ்
கிச்சனில் பாட்டில் துர்நாற்றம் நீங்க அதில் சிறிது கடுகு போட்டு, வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் கழித்துக் கழுவினால், துர்நாற்றம் போய்விடும்.
பயறு வகைகளை ஊறப்போட மறந்துவிட்டால் பயறை ஹாட் பேக்கில் போட்டு தேவையான அளவு வெந்நீர் ஊற்றி மூடி ஒரு மணி நேரம் கழித்து எடுத்து , வழக்கம்போல குக்கரில் வேகவைத்துப் பயன்படுத்தலாம்.
வாழைப்பூவை ஆய்ந்ததும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால், பூப்பூவாக வரும்.
முருங்கை இலையை ஒரு ஈரத்துணிக்குள் கட்டி இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் பிரித்தால், இலைகள் நன்றாக உதிர்ந்திருக்கும்.