கியூபா நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பதவியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களே இருந்து வந்தனர்.
கியூபா நாட்டில் அதிபராக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பதவி வகித்து வந்தனர். இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்து வந்தவர் பிடல் காஸ்டிரோ . இவர் 1959 ஆம் ஆண்டு நடந்த புரட்சிக்குப் பின்னரே பதவி வகித்து வந்தார். மேலும் பிடல் காஸ்டிரோ பதவியிலிருந்து விலகியபோது தனது சகோதரரான ராவுல் காஸ்டிரோ பதவிக்கு வந்தார்.
தற்போது கியூபாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் 4 நாள் மாநாடு நடைபெற்றபோது அதில் பங்கேற்ற ராவுல் காஸ்டிரோ கட்சியில் தலைமை பதவியிலிருந்து தாம் விலகுவதாக கூறியுள்ளார். மேலும் ராவுல் காஸ்டிரோ 2011 ஆம் ஆண்டு அதாவது தனது 89 வது வயதில் சகோதரர் பிடல் காஸ்ட்ரோவிடமிருந்து பதவியைப் பெற்றுக் கொண்டார். மேலும் 1959 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை இவ்விரு சகோதரர்களும் அதிபர் பதவியிலிருந்து அந்த நாட்டை ஆண்டு வந்தனர்.
அதன்பிறகு 2018 ஆம் ஆண்டு அதிபர் பதவியில் இருந்து விலகிய ராவுல்காஸ்டிரோ தற்போது கட்சித் தலைமைப் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது கியூபா நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பதவிக்கு அதிபர் மிகுவல் தியாஸ் கேனல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பதவிக்கு பிடல் காஸ்டிரோ குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் இல்லாமல் வேறு ஒருவர் பதவிக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும் என்று கூறியுள்ளனர். தற்போது அதிபர் மிகுவல் தியாஸ் கேனல் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இவர் பிடல் காஸ்டிரோ குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.