பாலிவுட் திரையுலகில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருப்பவர் பிரபல நடிகை கியாரா அத்வானி. தமிழில் இது இவருக்கு முதல் படமாக இருந்தாலும் சங்கர் இயக்கும் பிரம்மாண்ட படம் என்பதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் திரைப்படத்திற்கு தான் கியாரா அத்வானி கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
ஹிந்தியில் வெப் சீரிஸ் போன்றவற்றில் நடித்து வந்த இவரை இயக்குனர் சங்கர் ராம் சரண் நடிக்கும் படத்திற்காக தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்துள்ளார் ஆனால் அவரது சம்பளத்தை கேட்டால் தான் பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. சுமார் ஐந்து கோடி ரூபாயை சங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு சம்பளமாக பெற இருக்கிறார் கியாரா அத்வானி. இது தமிழில் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாராவின் சம்பளத்தை விட அதிகம் என தெரியவந்துள்ளது.