பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது .
14-வது சீசன் ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் நேற்று நடைபெற்றது .இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி – தேவ்தத் படிக்கல் ஜோடி களமிறங்கினர்.இதில் விராட் கோலி 5 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து களமிறங்கிய ஸ்ரீகர் பரத் , தேவ்தத் படிக்கல் உடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் .ஆனால் பரத் 16 ரன்னில் ஆட்டமிழக்க ,அடுத்ததாக படிக்கல் 22 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேற இறுதியாக ஆர்சிபி அணி 19 ஓவரில் முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 92 ரன்னில் சுருண்டது .இதன்பிறகு 93 ரன்கள் எடுத்தார் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
பேட்டிங்கில் சொதப்பிய பெங்களூர் அணி பந்து வீச்சிலும் சொதப்பியது. இதில் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ஷுப்மான் கில்-வெங்கடேஷ் அய்யர் ஜோடி களமிறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்குள் 82 ரன்கள் எடுத்தது. இதில் வெங்கடேஷ் அய்யர் 41 ரன்னில் ஆட்டம் இழக்க கொல்கத்தா அணி 10 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் குவித்தது. இதனால் 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.