ராஜஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றுள்ளது .
14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 54-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஷுப்மான் கில் 56 ரன்கள் குவித்தார். ராஜஸ்தான் அணி சார்பில் கிறிஸ் மோரிஸ் , சக்கரியா, ராகுல் திவாடியா மற்றும் பிலிப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதன்பிறகு 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடியது .ஆனால் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ராஜஸ்தான் அணி தடுமாறியது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது.இதில் அதிகபட்சமாக ராகுல் திவாடியா 44 ரன்கள் எடுத்தார் .இறுதியாக ராஜஸ்தானில் 16.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது .இதனால் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.