தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது ? ஆன்லைன் வகுப்பு நடத்துவது குறித்த பர்வேறு கேள்விகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய் தாக்கத்தால் மார்ச் முதல் மாதத்திலேயே மூடப்பட்ட பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. அக்டோபர் மாதத்தில்தான் கொரோனாவில் உடைய வீரியம் அதிகரிக்கும் என்று அரசு கூறி வருகின்ற நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் குழப்பம் நிலவி வந்தது.
அதே நேரம் பல பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு ஏற்புடையதா? இல்லையா? ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கண்களுக்கு கேடு ஏற்படுமா ? ஆன்லைன் வகுப்புகள் மூலமாக மாணவர்கள் மனரீதியாகவும் பாதிக்கப்பட வாய்ப்புண்டு என்று பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவி வருகின்றன.
இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் குறித்து முதலமைச்சருடன் பேசி இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதே போல தற்போதைய நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்ட சாத்தியமில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார்.