திருமண தரகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள திருவாக்கவுண்டனூர் பகுதியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வந்தார். இவர் திருமண புரோக்கராக இருந்தார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் வழக்கம்போல் தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் மனமுடைந்த மாரியம்மாள் கணவனிடம் கோபித்துக் கொண்டு தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் சிவலிங்கத்தின் வீட்டுக்கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவலிங்கத்தின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சிவலிங்கம் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து சிவலிங்கத்தின் சடலத்தை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.